புதுச்சேரியிலிருந்து சென்னை மற்றும் சேலத்திற்கு ஜூலை 15 ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடக்கம்

Thursday 24, January 2019, 19:26:33

புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தற்போது பெங்களூர் மற்றும் ஐதாராபாத்திற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை அளித்து வருகிறது.

இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதம் 15 ஆம் தேதி முதல் சென்னை மற்றும் சேலத்திற்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளது ஏர் ஒடிஷா நிறுவனம். பயணித்திற்கான முன்பதிவையும் தற்போது தொடங்கியுள்ளது அந்நிறுவனம்.

அதன்படி, சென்னையிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.55 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மீண்டும் மதியம் 1.15 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்படும் விமானம் மதியம் 2 மணிக்கு சென்னையை சென்றடையும்.

அதேபோல், காலை 9.10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் காலை 10 மணிக்கு சேலம் சென்றடையும். மீண்டும் மதியம் 12.15 மணிக்கு சேலத்திலிருந்து புறப்படும் விமானம் மதியம் 1 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டண விவரம்:
1. சென்னை - புதுச்சேரி ரூபாய் 1,940.
2. புதுச்சேரி - சென்னை ரூபாய் 1,470.
3. புதுச்சேரி - சேலம் ரூபாய் 1,550.
4. சேலம் - புதுச்சேரி ரூபாய் 1,550

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz