2019-20 நிதியாண்டு இடைக்கால பட்ஜெட்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

Friday 01, February 2019, 17:44:00

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதையடுத்து, 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட் 2019: மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் :

1) தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.50 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2) வருங்கால வைப்பு நிதி மற்றும் சில குறிப்பிட்ட பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் 6.5 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை.

3) நிரந்தர கழிவுத் தொகை ரூ. 40 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

4) 2.4 லட்சம் ரூபாய் வரையில் வீட்டு வாடகைக்கு வருமான வரி கிடையாது

5) வங்கி மற்றும் தபால் நிலையங்களில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு தற்போது வழங்கப்படும் வருமான வரி விலக்கு ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்படும்.

6) வருமான வரி செலுத்துவோருக்கு 24 மணிநேரத்தில் கணக்கு ஆய்வு செய்யப்பட்டு தொகை திருப்பிச் செலுத்தப்படும்

7) 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த தொகை 3 தவணையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

8) அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்திர ஓய்வுதியம் ரூ. 3,000 வழங்கப்படும்

9) கிராஜூட்டி தொகை உச்சவரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும்.

10) ராணுவத்துக்கான ஒதுக்கீடு ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

11) வீடு வாங்குபவர்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்.

வருமான வரி அதிரடி சலுகைகள்:

வருமான வரி உச்ச வரம்பு சலுகை 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு

நிரந்தர கழிவு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு

ஒட்டுமொத்த வருமா வரிசலுகையால் 6.25 லட்சம் வரையில் இனி வருமான வரி கட்ட வேண்டிய தேவையில்லை.

இரண்டு வீடுகளுக்கு இனி வீட்டுக்கடன் சலுகை வழங்கப்படும்

வங்கி வட்டியில் இருந்து  வருமானத்துக்கு தனியாக 50 ஆயிரம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும்

2வது வீடு வாங்குபவர்களுக்கும் வருமான வரியில் சலுகை

வீட்டு வாடகை கழிவுக்கான உச்ச வரம்பு ரூ. 1.80 லட்சத்தில் இருந்து ரூ. 2.40 லட்சமாக உயர்வு

5 லட்சம் ரூபாய் வரை அனைவருக்கும் வருமான வரி விலக்கு. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சேமிப்புகளில் முதலீடு செய்பவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு

மார்ச் மாதத்துக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் வசதி:

வரும் மார்ச் மாதத்துக்குள் நாடுமுழுவதும் அனைத்து வீடுகளுக்கும் சவுபாக்கியா திட்டத்தின் கீழ் மின் வசதி செய்து தரப்படும் என்று நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தார்.

இதர சலுகைகள்:

பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள்

ராணுவத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

ராணுவத்தில் ஒரே பணி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதற்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமும் 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 மடங்கு அதிகரித்துள்ளது.

ஆளில்லா லெவல் கிராசிங் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது

மாதம் ரூ.3000: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம்

நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்காக புதியபென்ஷன் திட்டம் 2019-20 இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை உருவாக்கப்படும்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும்

புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 12 கோடி பேர் பயன் பெறுவர்

பிஎப் சந்தாதாரர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ. 6 லட்சமாக உயர்வு

கடனை உரிய நேரத்தில் கட்டினால் 3 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும்

மேலும் 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும்

விவசாயிகளுக்கு ரூ. 6,000 நிதியுதவி:

2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

மூன்று தவணையாக வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

கிசான் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வட்டி மானியம் இரட்டிப்பாக்கபப்டும்.

 

 

 

 

 

 

 

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz