பெங்களூருவில் அந்தரத்தில் மோதி நொறுங்கிய 2 விமானங்கள்; ஒரு விமானி பலி

Tuesday 19, February 2019, 17:25:38

ஏரோ இந்தியா விழாவுக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய விமானப் படை விமானங்கள் அந்தரத்தில் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் விமானி ஒருவர் பலியானார்.

வடக்கு பெங்களூருவின் எலஹங்கா விமானத் தளத்தில், இந்திய விமானப் படையின் சூர்யகிரண் ஏரோபிக் குழு சார்பில் ஒத்திகை நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக விமானங்கள் இரண்டும் அந்தரத்தில் மோதின.

விமானத்தில் இருந்த மூன்று விமானிகளில் இருவர் பாதுகாப்பாக வெளியேறினர். மற்றொரு விமானி பரிதாபமாக பலியானார். பொது மக்களில் ஒருவர் காயமடைந்தார். சேதமடைந்த விமானங்கள் இஸ்ரோ அருகே விழுந்தன.ஏரோ இந்தியா விழா வரும் பிப்ரவரி 20 முதல் 24 வரை நடைபெற உள்ளது. இதன் நட்சத்திர நிகழ்ச்சியாக இந்திய விமானப் படையின் சாகசங்கள் நடைபெறும். இதுதொடர்பான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆண்டுதோறும் பெங்களூரு ஏரோ இந்தியா விழாவை நடத்தி வருகிறது. 1996-ல் தொடங்கப்பட்ட இந்த விழா, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் கடைசியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz