‘அதிமுக மற்றும் பாஜகவுடன் தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்’ - சுதீஷ் அறிவிப்பு

Wednesday 06, March 2019, 22:33:24

பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் பாஜகவுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்தார். 

 ‘அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்’ என்று கூறினார்.

“மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்குமாறு பேசினார். அதன் அடிப்படையில் இன்று அவரை சந்தித்து பேசினேன்.  பாஜகவுடன் கூட்டணி என்கிற முடிவை தலைவர் எடுத்தார். அதன்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

தற்போது சென்னையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பியூஸ் கோயல் செல்வதால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும். தேமுதிகவின் பலத்தின் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்கள் கட்சியின் பலம் எங்களுக்குத்தான் தெரியும், எங்கள் தேவையை தெரிவித்துள்ளோம். நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டணி இறுதியாகலாம்.  தமிழகத்தில் அடுத்த முறை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார்” என சுதீஷ் தெரிவித்தார்

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz