தனிப்பட்ட முறையில் பேச என்னிடம் எதுவும் இல்லை - சுதீஷுக்கு துரைமுருகன் மறுப்பு.

Thursday 07, March 2019, 19:44:56

தன்னிடம் சுதீஷ் தனிப்பட்ட முறையில் மட்டுமே பேசியதாகக் கூறியதை திமுக பொருளாளர் துரைமுருகன் மறுத்துள்ளார்.

தனிப்பட்ட முறையில் சுதீஷிடம் பேச என்னிடம் எதுவும் இல்லை. தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றால் சுதீஷ் நேற்றே மறுத்திருக்க வேண்டியதுதானே? இன்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று மறுத்தார் துரைமுருகன்.

மேலும் அவர் கூறியபோது அவர் என்னிடம் பேச வந்தபோது என்னுடைய நிலையை சொன்னேன். இது மாதிரி எல்லாம் பேசியதின் மூலம் சுதீஷ் மீது நான் வைத்திருந்த மரியாதையை அவரே குறைத்துக் கொண்டு விட்டார் என்றார்.

தேமுதிக நிர்வாகிகள் தன்னிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறியதையும் அவர் மறுத்தார். "தேமுதிக நிர்வாகிகளைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். அனகாபுத்தூர் முருகேசன் யார் என்றே எனக்கு தெரியாது.  

தேமுதிக நிர்வாகிகளை நான் முன்பின் பார்த்தது கூட கிடையாது. மாறி மாறி பேசி வருகிறார்கள் தேமுதிக நிர்வாகிகள். மறுபடியும் அதிமுகவிடம் பேசுவதற்காக எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். தேமுதிக ரொம்ப நொந்து போயிருக்காங்க.. அவர்களைப் புண்படுத்த விரும்பலை" என்று முத்தாய்ப்பாகக் கூறி முடித்தார் துரைமுருகன்

 - 

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz