தேர்தல் நடைமுறை அமலுக்கு வத்தால் தான் எங்களால் முழு வீச்சில் செயல்பட முடியும் - தமிழக தலைமை தேர்தல அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டி

Thursday 07, March 2019, 20:11:17

தமிழக தலைமை தேர்தல அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டி:

கடந்து ஒரு மாதத்தில் வாக்காளர் அட்டைக்காக 10 லட்சத்து 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன..

வாக்கு சாவடிகளில் வாக்பாளர்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்..

2018 வரை 65592 வாக்குசாவடி மையங்கள் இருந்தன.. தற்போது 67664 வாக்குசாவடி மையங்கள் உள்ளது. இதை உயர்த்த வாய்ப்புள்ளது.

வாக்குபதிவு செய்யும் இயத்திரங்கள் 1,67,932 உள்ளன.. விவபேட் இயந்திரம் 88 ஆயிரம் உள்ளன..

2000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து தமிழக அரசிடம் தகவல் கேட்டுள்ளோம்.. இன்னும் அரசு பதிலளிக்கவில்லை.. தேர்தல் நடைமுறை அமலுக்கு வத்தால் தான் எங்களால் முழு வீச்சில் செயல்பட முடியும்

தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர் அட்டை இல்லையென்றால் ஒட்டுநர் உரிமம் உள்ளிட்ட 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது..

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 200 கம்பனி துணை ராணுவ படையை கேட்டுள்ளோம்..கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 140 கம்பனி துணை ராணுவ பனையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர் என்று தமிழக தலைமை தேர்தல அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz