அதிமுக - தேமுதிக தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

Sunday 10, March 2019, 22:18:35

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு என ஒப்பந்தம் கையெழுத்தானது.உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

இன்று நநடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின்போது தேமுதிக சார்பில் கலந்து கொண்டு கையெழுத்து போட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பின்போது எதுவும் பேசவில்லை. அவருக்குப்  பதிலாக பிரேமலதா தான் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அதிமுக - தேமுதி கூட்டணி ஒரு வெற்றிக்கூட்டணி. நாளை நமதே, நாற்பதும் நமதே எனும் வகையில் இந்த கூட்டணி வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும், அதன் பிறகும் கூட்டணி தொடரும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

நேற்றைய பேட்டியில் ஜெயலலிதா என உரத்த குரலில் பெயரைச் சொல்லிய பிரேமலதா... இன்றைய பேட்டியில் புரட்சித் தலைவி அம்மா என பவ்யமாகக்  கூறினார் நான்கு இடங்கள் நிறைவளிக்கிறதா என்ற கேள்விக்கு எண்களில் ஒன்றும் கிடையாது; எண்ணங்களில் தான் எல்லாம் இருக்கிறது என்றவர், இறுதியாக அதிமுக எம்பிக்கள் குறித்து நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் இந்தப் பேட்டியின்போது தெரிவித்தார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz