மதுரை சித்திரை திருவிழா இருக்கும் நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து தேர்தல் கமிஷனில் கேள்வி எழுப்புவோம் – ஸ்டாலின் அறிவிப்பு

Monday 11, March 2019, 17:53:34

தமிழகத்தில் நீண்ட காலமாக 21 சட்டசபைகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. நேற்றைய தேர்தல் கமிஷனின் தேர்தல் அறிவிப்பில் 21 தொகுதிகளில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் எஞ்சிய 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் பேசியதாவது:

வழக்குகளை காரணம் காட்டி ஒத்திவைப்பதாக கூறுவது சரியானது அல்ல. வழக்கு நடந்தால் தேர்தல் நடத்தக்கூடாது என்பது மரபு அல்ல. எவ்வித தடையும் இல்லாமல் தேர்தலை நிறுத்துவதில் உள்நோக்கம் இருக்கிறது.

பழனிசாமி ஆட்சியை காப்பாற்ற தேர்தல் நடத்தாமல் சதி நடந்துள்ளது. திருவாரூர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது, பின்னர் நிறுத்தப்பட்டது. தேர்தல் கமிஷன் உள்நோக்கத்துடன் செயல்படக்கூடாது.

தேர்தல் அதிகாரியை சந்தித்து நாங்கள் மனு அளிக்கவுள்ளோம். நியாயம் கிடைக்கவில்லை எனில் நாங்கள் கோர்ட்டுகளை அணுகுவோம். தேர்தல் கமிஷன் தேதி அறிவிக்கும்போது வெயில், கல்லூரி, திருவிழாக்கள் என மனதில் வைத்துதான் தேர்தல் அறிவிப்பார்கள்.

மதுரை சித்திரை திருவிழா இருக்கும் நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் கமிஷனிடம் கேள்வி எழுப்புவோம். திமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளை இன்றோ அல்லது நாளை இரவுக்குள்ளோ அறிவிப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz