பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்தது வாட்ஸ்-அப்!

Wednesday 03, April 2019, 18:53:51

பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதியை வாட்ஸ்-அப் சமூக வலைத்தளம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

'வாட்ஸ் ஆப்' மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களால், நாட்டின் பல்வேறு பகுதிகளில், வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் பரவிய, வாட்ஸ் ஆப் தகவல்களை நம்பி, வன்முறை கும்பல்களால் பலர் கொல்லப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன.

இதையடுத்து, பொய் தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி, வாட்ஸ் ஆப்பிற்கு, மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, தகவல்கள் அதிகளவில் பரப்பப்படு வதை தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகளை, வாட்ஸ் ஆப் விதித்துள்ளது.

இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் பொய் தகவல்களின் துவக்கத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கும்படி கடந்த வருடம் மத்திய அரசு, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பொய் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, வாட்ஸ்-அப் சமூக வலைத்தளம், பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதியை இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்தது.

இதன்படி, வாட்ஸ்-அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு வரும் சந்தேகத்துக்கிடமான ஒரு செய்தியின் நம்பகத்தன்மையை அறிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘செக்பாயிண்ட் டிப்லைன்’ தொழில்நுட்பத்துக்கு அந்த செய்தியை ‘91-9643000888’ என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். சரிபார்க்கும் மையம், அச்செய்தியை சரிபார்த்து, அது உண்மையானதா? பொய்யானதா? சர்ச்சைக்குரியதா? என்ற தகவலை வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும்.

படங்கள், வீடியோ லிங்க், எழுத்து வடிவம் என பலவகையான செய்திகளை இந்த மையம் ஆய்வு செய்யும். இந்த சேவை, ஆங்கிலத்திலும், இந்தி, தெலுங்கு, வங்காளம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது....

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz