தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் இன்று ஆசிரியர்தினவிழா கொண்டாட பட்டது.இந்ந நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் .பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் இவர்களுடன் மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்தியாவிலேயே முதன்முறையாக 3000 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இதற்காக 9.10.11.12 ஆகிய வகுப்புகளுக்கு அடுத்த மாதத்திற்குள் இண்டர்நெட் இணைப்பு வழங்கப்படும்.மேலும் ஆசிரியர்களின் பணியினை எளிதாக்க ஆசிரியர்களுக்கும் மடிக்கணிணி வழங்க முதல்வரிடம் பேசிவருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவர் பேசும்போது, பள்ளி கல்வித்துறைக்கு QR கோடு எனும் செயலி உருவாக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் 339 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.