ஜப்பானில் கடும் அனல் காற்று: 65 பேர் பலி: 22,000 பேர் மருத்துவமனையில் அனுமதி

Thursday 26, July 2018, 19:15:19
டோக்கியோ,
 
ஜப்பானில் கடந்த ஒரு வாரமாக கடும் அனல் காற்று வீசி வருகிறது. இந்த அனல் காற்றால் இதுவரை 65 பேர் உயிரிழந்தனர். சுமார் 22,000க்கும் மேற்பட்டோர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
 
அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனவிலங்கு சரணாலயங்களிலும் அனல்காற்று காரணமாக விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து ஜப்பான் தலைமை செயலாளர் யோஷியட் சுகா கூறியதாவது:
 
தொடர்ந்து அனல்காற்று வீசி வருவதால் பள்ளி மாணவ-மாணவிகளை பாதுகாப்பாக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. ஜப்பான் வானிலை மையம் இதனை இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது. 
 
ஜப்பானில் தொடர்ந்து அனல்காற்று வீசி வருவதால் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் அரசு தொடர்ந்து போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz