தர்மபுரி மாவட்டம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இன்று இவர் தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்சி ஒன்றில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிக்குச் சென்றார்.
இவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டினை இழந்து பாரூர் அருகே சாலையோரமாக உள்ள கிணற்றில் நிலை தடுமாறி விழுந்தது
காருள் இருந்த தங்கவேல், ராஜேந்திரன், ரமா, பிரீத்தி ஆகியோர் சுதாரித்தவர்களாக குதித்து வெளியேறித் தப்பித்தனர்.
ஆனால் 3 வயதான வர்ஷினி, 7 வயதான தர்ஷினி ஆகிய இரண்டு குழந்தைகள் தப்பிக்க இயலாமல் காருடன் நீரில் மூழ்கினர்.
தகவலறித்துஉடனடியாக சம்பவ இடத்திற்கு பாரூர் காவல்துறையினர் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
கிணற்றில் மூழ்கிய காரில் சிக்கிய அந்தக் குழந்தைகளை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சடலங்களாக மட்டுமே மீட்க அவர்களால் முடிந்தது. நெஞ்சைப் பதற வைக்கும் இந்தச் சம்பவம் அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.