டோக்லாம் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது -அமெரிக்கா

Thursday 26, July 2018, 19:21:43
வாஷிங்டன்
 
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்தது.
 
இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும் இங்கு படைகளை குவித்தன. இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தன.இந்த நிலையில் இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது.
 
இதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தூதரக ரீதியாக சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
 
இரு தரப்பிலும் தங்களுடைய கண்ணோட்டம், கவலைகள், நலன்கள் முன்வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், டோக்லாமில் இரு நாடுகளும் படைகளை விரைவில் வாபஸ் பெறுவதென ஒப்புக் கொள்ளப்பட்டது. 
 
இந்த நிலையில்  டோக்லாம் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
 
தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க  பிரதம உதவி துணை செயலாளர் அலிஸ் ஜி வெல்ஸ், எல்லையில் சீனாவின் சாலை-கட்டுமான நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு 
 
இந்தியா தனது வடக்கு எல்லைகளை பாதுகாத்து வருவதாக நான் மதிப்பிட்டு உள்ளேன்.   இது இந்தியாவிற்கான கவலைக்குரிய விஷயமாகும் என கூறினார்.
© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz