கூவத்தூரில் நடந்து பற்றித் தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பேன் - கருணாஸ் வைக்கும் 'செக்'. 

Friday 21, September 2018, 14:06:23

தனது சர்ச்சைக்குரிய பேச்சால் சிக்கலுக்கு ஆளாகியுள்ள நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், கூவத்தூரில் நடந்து பற்றி தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பேன் என்று ஆளும் அ.தி.மு.கவுக்குச் 'செக்'. வைக்கும் விதமாகக் கூறியுள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

இதுவரை எந்த வழக்கும் என்மேல் இல்லை. எந்த மேடையில் இதுவரை சர்ச்சையாக பேசவில்லை. 

காவல்துறை அதிகாரி செய்யும் தவறை அனைவரும் ஆதரிக்கின்றனர். உள்துறை செயலாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை. 

கூவத்தூர் நடந்தது குறித்து தேவைப்பட்டால் தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பேன். 

இந்த ஆட்சி அமைக்க கூவத்தூரில் நான் இருந்தேன். என் சமூக மக்களை தமிழகம் முழுவதும் காவல்துறை பொய் வழக்கு போடுகிறது. 

குறிப்பிட ஒரு சமூகத்தை ஒருமையில் நான் பேசியதற்கு நான் வருத்தம் தெரிவித்துவிட்டேன். ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டேன் 

என் தொகுதிக்கு செல்ல கூட காவல்துறை பாதுகாப்பு இல்லை. இன்னும் சொல்லபோனால் பலர் காவல்துறையை விமர்சிக்கின்றனர். 

உண்மை இருந்தால் மட்டுமே என் சமூக மக்களுக்கு எது செய்தாலும் ஆதரவு தெரிவிப்பேன் என்று பேசினேன். 

மனித நேயத்துடன் நான் செயல்பட்டு வருகிறேன். அனைத்து மக்களையும் நேசிக்கிறேன். அனைத்து தரப்பு மக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். 

காவல்துறை எனக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை திருப்பி எடுத்தது. உளவுத்துறை அதிகாரி முதல்வருக்கு தவறான தகவலை கொடுக்கிறார். 

அமைச்சர் ஜெயக்குமார் அரிச்சந்திரன் போல் பேசுவார். கூவத்தூர் பற்றி நீதிமன்றத்தில் தெரிவிப்பேன்.

காவல்துறை போடப்பட்ட வழக்குகளை சந்திப்பேன்.

என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

© Copyright 2023 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz