தர்மபுரி: பாம்பு வடிவில் காளான் புற்று; பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்

Monday 24, September 2018, 17:48:01

தர்மபுரி அப்பாவு நகரில் உள்ள நாகர் கோவிலில் முளைத்துள்ள பாம்பு போன்று தோற்றமளிக்கும் காளானைத் தெய்வசக்தி எனப் பரவசத்துடன்  வழிபட்ட பக்கர்கள் அதற்குச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.

அப்பாவு நகர், நாகர் கோவில் அரசமரத்தடியில் இரண்டு நாட்களுக்கு முன்பும் இதேபோல பாபு போலத் தோற்றமளித்த காளான் ஒன்று முளைத்தாகவும், அதனைப் பிடுங்கி எறிந்த ஒரு பெண்மணிக்குக் கைகளில் அடங்காத அரிப்பு ஏற்பட்டதாகவும் கூறும் பக்தர்கள்  இன்றும் அதே  அரசமரத்தடியில் மீண்டும் பாம்பு வடிவில் பெரிய காளான் முளைத்ததைக் கண்டு அதனைத் தெய்வசக்தியாகக் கருதி  சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர். 

பாம்பு தோற்றமுடைய காளான் அரசமரத்தடியில் முளைத்த அதிசயம்  பற்றியத் தகவல் பரவியதை அடுத்து, அந்தப் பகுதியில் பரபப்பு ஏற்பட்டது.அங்கு வழிபாடு செய்ய வந்த ஒரு பெண்ணுக்கு அருள் வந்து, பாம்பு போல ஊர்ந்து கோவிலை வலம் வந்தார். அவருக்குப் பக்தர்கள் பால் ஊற்றித் தர அதனைப் பாம்பு போல நக்கிக் குடித்தது  மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று நடந்த இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, அந்தக் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.

© Copyright 2023 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz