கிருஷ்ணகிரி: பூக்களைச் சுமந்து வந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து.

Thursday 27, September 2018, 19:38:32

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் பூக்கள் சரக்கு வாகனங்கள் மூலம்  தினசரி கிருஷ்ணகிரி மற்றும் பெங்களுருவுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுவது வழக்கம். இன்று காலையில் அப்படி வந்த சரக்கு வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இன்று அதிகாலையில் தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள இருதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாய நிலங்களில் இருந்து பூக்களை ஏற்றுக்கொண்டு தேன்கனிக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்று,  பூதுக்கோட்டை என்னுமிடத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் வண்டியில் வந்தவர்கள் இலேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

© Copyright 2023 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz