இந்தோனேஷியாவில் சுனாமி தாக்குதல்; 300-க்கும் மேற்பட்டோர் பலி; பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு

Sunday 30, September 2018, 12:27:16

இந்தோனேஷியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமியின் தாக்குதலும் நடந்துள்ளது. கடந்த 2004-ல் இந்தோனேசியாவை சுனாமி தாக்கி ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு மீண்டும் தற்போது சுனாமி தாக்குதலால் இந்தோனேசியா உருக்குலைந்தது. 


இந்தோனேஷியா சுலேவேசியாவின் தாங்கலா தீவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டிடங்கள் குலுங்கியது, பொதுமக்கள் வெளியே ஓடிவந்தனர். அங்கே பதட்டமான நிலை ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.

அதேபோல் மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு தொடர்ச்சியாக நிலஅதிர்வுகளும் ஏற்பட்டது. முதல்கட்டமாக நேரிட்ட நிலநடுக்கத்தில் 9 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாகவும், அங்கிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தாங்கலாவில் பெரும்பாலான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்தோனேஷியா நகரை சுனாமி அலைகள் தாக்கியுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலு நகரை சுனாமி அலைகள் தாக்கியுள்ளது என்று பேரிடர் மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கட்டிடங்கள் பல இடிந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்துள்ளன.


நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், இந்தோனேஷியாவில் ஒரே மருத்துவமனையில் 30 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதமடைந்த மருத்துவமனை கட்டிடத்தில் சிக்கி 30 பேரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டதகவல் வெளியாகியுள்ளது.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz