திருச்சியில் அடைக்கலராஜின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Saturday 29, September 2018, 15:02:36

திருச்சி காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவரும், தொழிலதிபரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த எல்.அடைக்கலராஜின் 6-ம் ஆண்டு நினைவு தினம் திருச்சி ஜென்னி பிளாசாவில் அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் லூயிஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அடைக்கலராஜின் குடும்பத்தை சேர்ந்த ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ், பிரான்சிஸ் பாஸ்டின், முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜன், முன்னாள் தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், ஆர்.சி.பாபு, ஜெயப்பிரகாஷ், பொருளாளர் ராஜா நசீர், கள்ளிக்குடி சுந்தரம், சரவண சுந்தர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஹேமா, ஜெகதீஸ்வரி, ஸ்ரீரங்கம் சிவாஜி சண்முகம், பாஸ்கர், சேட், உறந்தை சண்முகம், ராஜா டேனியல் ராய், வரதராஜன், தென்னூர் சார்லஸ், எழிலரசன், அப்துல் குத்தூஸ், சிவா, ஜெயப்பிரியா,சுந்தர்ராஜ் மற்றும் பலர் கலந்துக்கொண்டு அடைக்கலராஜின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

© Copyright 2025 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz