புதுச்சேரி: காங்கிரஸ் தலைவர் வெட்டிக் கொலை!

Wednesday 01, August 2018, 11:54:54

புதுச்சேரி ... இன்று மாலை சுமார் நான்கு மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலை சின்ன முதலியார்சாவடி அருகே மாவட்ட காங்.தலைவர் ஜோசப்பை வழி மறித்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சரமாரியாகக் வெட்டப்பட்ட  ஜோசப் கொடூரமாகக் கொல்லப்பட்டார். 

அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஜோசப்பின் உடலுக்கு முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று சென்று அஞ்சலி செலுத்தினார்..

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz