கிருஷ்ணகிரி மாவட்ட மக்களைப் பரவசம் கொள்ள வைத்த சஞ்சீவிராய சுவாமிகள்!

Saturday 04, August 2018, 18:46:53

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மல்லசந்திரம் பஞ்சாயத்து ஆளேநத்தம் கிராமம் பேளூர் கேட் அருகே புகழ்பெற்ற சஞ்சீவிராயசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடத்தப்படும் மண்டல அபிசேகம், சீதாராமர் கல்யாண உற்சவம் மற்றும் மஹாலட்சுமி ஹோமம் ஆகியவை வெகு விமரிசையாக இன்று 06.08.2018 சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மஹாகணபதி ஆராதனை, அஸ்டதிக்பாலக ஆராதனை, பரிவார தேவாராதனை, யாக மண்டப பிரவேசம், நவகிரஹ ஹோமம், பூர்ணவதி போன்றவை நடைபெற்றன. 

ஸ்ரீசீதாராம திரு கல்யாண உற்வசத்துடன் ஆன்மீக சொற்பொழிவும் சிறப்பாக நடைபெற்றது. சஞ்சீவிராய சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் நடத்தியபின்  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பின் திருக்கடவுள்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தினைச் சேர்ந்த அளேநத்தம், பெண்ணாங்கூர், சாமிபுரம், பேளூர் போன்ற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

© Copyright 2023 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz