நடந்து சென்றவரின் செல்போனை பைக்கில் வந்து பறித்த கொள்ளையர்கள்!

Saturday 18, August 2018, 13:15:14

கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளி அருகே பாதுகாக்கப்பட்ட வனச்சரகம் உள்ளது இதன் வழியே பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ என்ற இடத்தில் இன்று காலையில் இளைஞர் செல்போன் பேசியவாறு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த சாலையில் பைக்கில் வந்த இருவர்நடந்து சென்றவரிடம் இருந்து அவசரமாகப் பேசவேண்டும் என்று செல்போனை இரவல் கேட்துள்ளனர். பைக்கில் வந்தவர்களை நம்பிய இளைஞரும் தனது செல்போனை அவர்களிடம் தந்துள்ளார்.

அவரிடமிருந்து செல்போனை வாங்கிய இருவரும் எதிர்பாராத விதமாக அந்த இளைஞரைக்  கீழே தள்ளிவிட்டு செல்போனுடன் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர் திமிறி எழுந்து அந்த பைக்கைக் கீழே தள்ளியுள்ளார். இதனால கோபமுற்ற பைக்கில் வந்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த   கத்தி, அரிவாள் போன்றவற்றைக் கொண்டு இளைஞரைத் தாக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே சாம்பல் பள்ளம் என்ற பகுதியில் இதே போன்று கைவரிசையைக் காட்ட முயன்ற  அவர்களை பொதுமக்கள் இருசக்கர வாகனத்துடன் மடக்கிப் பிடித்ததோடல்லாமல் கட்டி வைத்து தர்ம அடியும் கொடுத்தனர்.

பின்னர், குரும்பரப்பள்ளி காவல்துறையினரிடம் அந்த இரண்டு நபர்களும் ஒப்படைக்கப்பட்டனர்.  கைது செய்யப்பட்ட அவர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

© Copyright 2023 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz