கேரளா: வரலாறு காணாத வெள்ளச்சேதம்....

Saturday 18, August 2018, 13:36:47

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதம் பற்றி கொச்சியில் கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் அல்போன்ஸ் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வரலாறு காணாத வெள்ளச்சேதத்தை பார்வையிட  பிரதமர் மோடி கேரளம் வந்துள்ளார்.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு வருகிறார். அவருடன் முதல்வர் பினராயி விஜயன், கேரளா ஆளுநர் சதாசிவம் ஆகியோர் பிரதமருடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

கேரளாவில் வெள்ளநிவாரணப் பணிக்கு ரூ.500 கோடியை பிரதமர் மோடி அறிவித்தார். கொச்சியில் முதல்வர் பினராயி விஜனுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக அறிவிக்கும்படி பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி டிவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். கேரளா மக்களின் எதிர்காலத்தை காப்பது நம் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz